For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் அஜித் எடுத்த போட்டோவை பகிர்ந்த #YogiBabu - இணையத்தில் வைரல்!

08:33 AM Aug 29, 2024 IST | Web Editor
நடிகர் அஜித் எடுத்த போட்டோவை பகிர்ந்த  yogibabu   இணையத்தில் வைரல்
Advertisement

நடிகர் அஜித் எடுத்த போட்டோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் யோகி பாபு பதிவிட்டுள்ளார்.

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன் பின்னர் சின்ன சின்ன காமெடி காட்சிகளில் நடித்து வந்த யோகி பாபு தற்போது பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அவரை கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் சமீபத்தில் யோகி பாபு மற்றும் ஒரு பிரபல யூடியூப் சேனல் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனலில் ஒரு நடிகர் தன்னை 'dont touch' என சொன்னதாக யோகி பாபு கூறியதாகவும், அது நடிகர் அஜித் தான் என யோகி பாபு கூறினார் எனவும் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : USA சென்றடைந்தார் முதலமைச்சர் #MKStalin – அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

இந்நிலையில், வேதாளம் படிப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை நடிகர் யோகிபாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபுவை நடிகர் அஜித்குமார் புகைப்படம் எடுக்கும் போட்டோ தான் அது. இந்த புகைப்படம் தான் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று யோகி பாபு அதில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது

Tags :
Advertisement