‘ஏன் டி விட்டுப்போன...’ - சிம்பு பாடிய பிரேக் அப் சாங் ப்ரோமோ!
‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கிவரும் திரைப்படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையில் இப்படத்திலிருந்து ‘ரைஸ் ஆப் தி டிராகன்’ மற்றும் ‘வழித்துணையே’ ஆகிய இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இப்படம் முன்னதாக வருகிற காதலர் தினத்தன்று (பிப்.14) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பட்டதால், டிராகன் படத்தின் ரீலிஸ் பிப்ரவரி 21ஆம் தேதி தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்திலிருந்து மூன்றாவது பாடலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக படக்குழு ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் பாடலாசிரியர் கோ சேஷா வரிகளில் பிரேக் அப் பாடலாக உருவாகியிருக்கும் ‘ஏன் டி விட்டுப்போன’ என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாகவும், இப்பாடல் வருகிற 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.