Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிக்ஜாம் புயல் - கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!

09:58 PM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது.  இது மேலும் வலுவடைந்து நாளை (டிச.4) முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ.  வேகத்தில் நகர்கிறது.

இதையும் படியுங்கள்: ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
andra pradeshChennaiCycloneCyclone ChaungHeavy rainfallIndiaKeralaMichaungnews7 tamilNews7 Tamil UpdatesOrange alert
Advertisement
Next Article