For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓடிடியில் வெளியானது 'யாத்ரா 2' திரைப்படம்!

04:20 PM Apr 13, 2024 IST | Web Editor
ஓடிடியில் வெளியானது  யாத்ரா 2  திரைப்படம்
Advertisement

நடிகர் ஜீவா,  மம்மூட்டி நடித்துள்ள யாத்ரா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Advertisement

மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை,  'யாத்ரா' என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது.  இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார்.  இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை 'யாத்ரா-2' என்ற பெயரில் உருவாகி உள்ளது.

மஹி வி ராகவ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.  இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகியது.  இந்த நிலையில், இத்திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement