Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘யாரு சாமி நீ’ - பாதுகாப்பு கவசமின்றி வெறுங்கால்களுடன் மலை ஏறும் 60 வயது முதியவர்!

08:53 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி வெறுங்கால்களுடன் மலை ஏறும் 60 வயது முதியவரின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வருகிறது. 

Advertisement

வயது என்பது எதற்கும் தடையில்லை என்பதை பல முதியவர்கள் பல தருணங்களில் அவ்வபோது நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் விடாமுயற்சியும், துணிச்சலும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அலைன்ராபர்ட் என்ற முதியவர் நிரூபித்துள்ளார். 60 வயதான இவர் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி மலை ஏறும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைராலாகி வருகிறது.

இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள வெர்டன் மலையில் வெறுங்கால்களுடன் மலை ஏறும் வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வயாளர்களை கடந்துள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் இது சாத்தியமாகுமா? என்று வினவியுள்ளார். மற்றொருவர் இந்த வீடியோ ஒரு உத்வேகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த காணொலியை கண்டு வியந்த மற்றொரு நபர் வயது வெறும் எண் என்பதை நிரூபித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

Tags :
FranceMountain climbingold manVerdon Mountainviral video
Advertisement
Next Article