Xiaomi SU7 EV: ஒரு சார்ஜ்ஜில் 800 கி.மீ. மைலேஜ்... இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா?
மொபைல் உலகின் முக்கிய நிறுவனமான ஜியோமி தனது இரண்டாவது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த நிறுவனமான ஜியோமி, மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தனது புதிய தயாரிப்பான மின்சார காரை அறிமுகப்படுத்தி ஜியோமி நிறுவனம் ஆச்சரியப்பட செய்தது.
ஜியோமி நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்றுவரும் எம்டபிள்யூசி (மொபைல் வொர்ல்ட் காங்கிரஸ்) உலக மாநாட்டில் புதிய தயாரிப்பான எஸ்யூ7 செடான் காரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அக்வா ப்ளூ எஸ்யூ7 பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் திறன் சார்ந்தும் முக்கிய வரவாக இருக்க போவதாக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சூப்பர்கார் ஆன மெக்லாரென் 720எஸ் போல இருக்கும் ஜியோமியின் இந்த கார் அதிகபட்சம் 265 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.