For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திடீரென உலகம் முழுவதும் முடங்கிய 'எக்ஸ்' தளம்!

சமூக ஊடகமான எக்ஸ் (X) தளம் இன்று திடீரென உலகம் முழுவதும் முடங்கியது.
07:59 PM Mar 10, 2025 IST | Web Editor
திடீரென உலகம் முழுவதும் முடங்கிய  எக்ஸ்  தளம்
Advertisement

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் (X) தளம் இன்று திடீரென உலகம் முழுவதும் முடங்கியது. இன்று (மார்ச் 10), பிற்பகல் 3:15 மணியளவில், பயனர்கள் எக்ஸ் தளத்தை அணுகுவதில் சிரமங்களைச் சந்தித்தனர். X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பயனர்கள் பலரும் புகாரளித்தனர்.

Advertisement

இதையும் படியுங்கள் : யூடியூப் பார்த்து டயட்… 18 வயது இளம்பெண் உயிரிழப்பு… கேரளாவில் அதிர்ச்சி!

இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. பின்னர் பிற்பகல் 3:45 மணியளவில் எக்ஸ் சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பின் செயலி மற்றும் வலைத்தளத்தில் மீண்டும் உள்நுழைய முடிந்தது. இருப்பினும் X  வலைத்தளத்தில் உள்நுழைவதில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எக்ஸ் வலைதளம் முடங்குவது இது முதல் முறை அல்ல. இந்த தளம் கடந்த ஆண்டு, பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், இதற்கு எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement