For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

எழுத்தாளர் நாறும்பூநாதன் (64) மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
06:02 PM Mar 16, 2025 IST | Web Editor
எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு   முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்
Advertisement

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் (64) இன்று உயிரிழந்தார். இதையடுத்து இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது;

எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

நாறும்பூநாதன் நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளாலும், சமூகச் செயற்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட முற்போக்கு இயக்க எழுத்தாளராக விளங்கியவர் ஆவார். நமது அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

நாறும்பூநாதன் இலக்கியப் பங்களிப்புகள், சமூகச் செயற்பாடுகள், பள்ளி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி அவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான உ.வே.சா. விருதினை நமது அரசின் சார்பில் வழங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துயர்மிகு தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் -இலக்கியத் துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Tags :
Advertisement