For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இனி என்னிடம் போராட சக்தி இல்லை" - மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு!

07:11 AM Aug 08, 2024 IST | Web Editor
 இனி என்னிடம் போராட சக்தி இல்லை    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு
Advertisement

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

33வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று (ஆக. 7) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை உள்பட 3 பேரை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிச்சுற்றில் விளையாட இருந்த நிலையில் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். எனவே இந்த பிரிவில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள் : அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த விமர்சனம் – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்!

இந்நிலையில், மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“நான் தோற்றுவிட்டேன், மல்யுத்தம் வென்றுவிட்டது. என்னை மன்னிக்கவும், எனது தாயாரின் கனவும் என்னுடைய தைரியமும் உடைந்து போயுள்ளன.இனிமேலும் போராட என்னிடம் வலுவில்லை . மல்யுத்தத்திலிருந்து(2001 - 2024) விடைபெறுகிறேன். உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்”

இவ்வாறு வினேஷ் போகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement