For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

80 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு கண்டுபிடிப்பு!

04:06 PM May 27, 2024 IST | Web Editor
80 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு கண்டுபிடிப்பு
Advertisement

2-ம் உலகப் போரில் ஜப்பானின் பல போர்க்கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு 80 ஆண்டுகளுக்குப் பிறகு தென்சீனக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இரண்டாம் உலகப்போர் நேச நாடுகளுக்கும்,  அச்சு நாடுகளுக்கும் இடையில் 1939-45 காலகட்டத்தில் நடைபெற்றது.  அனைத்து உலக வல்லமை பெற்ற நாடுகளில் பெரும்பாலானவை இந்த போரில் பங்கெடுத்தன.  இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர். இந்தப் போரில் விமானங்கள் மூலம் மக்கள் தொகை மிகுந்த இடங்கள் மீது குண்டுகள் மற்றும் அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதால்,  7 முதல் 8.5 கோடிப் பேர் இதில் உயிரிழந்தனர்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் பல போர்க்கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு 80 ஆண்டுகளுக்குப் பிறகு தென்சீனக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   ‘யுஎஸ்எஸ் ஹார்டர்’ என்ற அக்கப்பல் எதிரிப்படைகளால் மூழ்கடிக்கப்பட்டது.  பிலிப்பீன்சின் வடக்குத் தீவான லூஸானை ஒட்டிய கடற்பகுதியில் 3,000 அடிக்குக் (914 மீட்டர்) கீழே அந்நீர்மூழ்கி கப்பலின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 1944 ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி 79 பேருடன் ‘ஹார்டர்’ கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.  இரண்டாம் உலகப் போரின்போது,  ‘ஹார்டர்’ நான்கு நாள்களில் மூன்று ஜப்பானியப் போர்க்கப்பல்களை மூழ்கடித்ததாகவும் இரண்டு கப்பல்களைப் பெருஞ்சேதத்திற்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement