WPL 2025 - யுபி வாரியர்ஸை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!
5 அணிகள் பங்கேற்றுள்ள நடப்பாண்டிற்கான (wpl) பெண்கள் பிரீமியர் லீக் (பிப்.14) தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில், நேற்றையப் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிரண் நவ்கிரே 51 ரன்களும், சுவேதா ஷெராவத் 37 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 167 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கடைசியில் ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் 167 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதில் அதிகபட்சமாக மெக் லானிங் 69 ரன்களும், அனபெல் சதர்லேண்ட் 41 ரன்களும் சேர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போட்டியில் 41 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.