Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

WPL 2024 : குஜராத் அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது உ.பி. வாரியர்ஸ்!

08:29 AM Mar 02, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

இதையும் படியுங்கள் : முகேஷ் அம்பானி மகன் திருமண கொண்டாட்டம்: மனைவியுடன் பங்கேற்ற மார்க் ஜுக்கர்பெர்க்!

இந்நிலையில், மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில்,  குஜராத் அணி முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தது. அதன்படி, உ.பி. வாரியர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  அபாரமாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி, 15.4ஓவர்களில் 4  விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம்  உ.பி.வாரியர்ஸ் அணி 5 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Tags :
CricketGGvsUPWGujaratGiantsupwarrioirzUPWvsGGWomensPremierLeagueWPL2024
Advertisement
Next Article