WPL 2024 : யு.பி. வாரியர்ஸை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி!
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் யு.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி த்ரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் நேற்று முன்தினம்(பிப்.23) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. பிப்.23-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் யு.பி. வாரியர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற யு.பி. வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 62 ரன்கள் விளாசினார்.
இதையும் படியுங்கள் : சசிகலாவின் புதிய இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த்!
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யு.பி. வாரியர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் வீழ்ந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூர் வீராங்கனை ஷோபனா ஆஷாவுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.