Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

WPL 2024 : RCB அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணி!

07:21 AM Mar 07, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி.வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

இதையும் படியுங்கள் : கை இழந்த பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்‘கை’!

இந்நிலையில், மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.  முன்னதாக களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேடிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5  விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Tags :
GGvsRCBGujarat gaintsRCBroyal challengersbangaloreWomensPremierLeagueWPL 2024
Advertisement
Next Article