For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

யு.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் - நடப்பு தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்து அபாரம்!

07:45 AM Mar 12, 2024 IST | Web Editor
யு பி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத்   நடப்பு தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்து அபாரம்
Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் யு.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி.வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

இதையும் படியுங்கள் :“அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால் சிஏஏ-வை அமல்படுத்தி கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

இந்நிலையில்,  மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், யு.பி.வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் பெத் மூனி 74 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யு.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

Tags :
Advertisement