For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

WPL 2024 இறுதிப்போட்டி : டெல்லி - RCB அணிகள் இன்று மோதல்! - சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

06:57 AM Mar 17, 2024 IST | Web Editor
wpl 2024 இறுதிப்போட்டி   டெல்லி   rcb அணிகள் இன்று மோதல்    சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்
Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதியது.

கடந்த 13-ம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதையும் படியுங்கள் : “கன்னியாகுமரியின் நான்கு வழிச்சாலை திட்டம் பாஜகவின் சாதனை என பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது” - விஜய் வசந்த் எம்.பி!

இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி நடைபெற்ற பிளே-ஆஃப் சுற்று போட்டியில், புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களைப் பிடித்ததிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்த நிலையில், 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இன்று (மார்ச் 17) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மெக் லான்னிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோத உள்ளது.

Tags :
Advertisement