உலகளவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு...இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
உலகளவில் மைக்ரோசாப்ட் மென்பொருள் செயலிழந்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் உள்ளிட்டவை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது. இதனால் மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, அமேசான் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்னையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேரில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர்களில் Blue screen of Death Error ஏற்பட்டுள்ளது. அதாவது உங்கள் சாதனம் சிக்கலில் உள்ளதாக குறிப்பிட்டு ஆபரேட்டிங் சிஸ்டமே முடங்கிவிட்டது.
மேலும் இப்போது இன்ஜினியர்ஸ், ஐடி ஊழியர்களும் அனைவரும் நீலநிற கம்பியை தேடி வருவர் (wire). கார்ப்பரேட் ஊழியர்களின் மனநிலை இப்போது எல்லோருக்கும் தெரியும் என பல கருத்துகளும், மீம்ஸ்களும் டிரெண்டாகி வருகிறது. ஒருபக்கம் மைக்ரோசாப்ட் மென்பொருள் செயலிழப்பால் வங்கி, விமான, மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒரு பக்கம் ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.