உலகின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் - இந்தியா 85வது இடத்திற்கு சரிவு!
09:35 AM Feb 20, 2024 IST
|
Web Editor
இந்த நிலையில் சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டிற்கான தரவரிசைக் குறீயீட்டில் இந்தியா கடந்த ஆண்டை விட ஒரு இடம் சரிந்துள்ளது. தற்போது இந்தியாவின் பாஸ்போர்ட் 85 வது இடத்தில் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நாடு பிரான்ஸ் ஆகும். இந்தியாவின் இந்த சரிவிற்கு காரணம் குறித்து சரியான தகவல்கள் இல்லை. ஆனால் கடந்த ஆண்டை விட இந்தியர்களுக்கான விசா இல்லாத நாடுகளுக்கான அணுகல் என்பது அதிகரித்துள்ள நிலையில்தான் இந்திய பாஸ்போர்ட் சரிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடமான 2023ன் ஒப்பிடும்போது 60 நாடுகளுடன் விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட்டை வைத்து பயணம் மேற்கொள்ளலாம். 2024ல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளும் கடந்த ஆண்டைப் போலவே பாகிஸ்தான் 106 தக்கவைத்துள்ளது. அதே நேரத்தில் வங்கதேசம் 101 வது இடத்தில் இருந்து 102 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மிக முக்கியமாக மாலத்தீவுகள் இந்தியாவை விட சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளது, மாலத்தீவு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 96 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்வதால் 58 வது இடத்தைப் பிடித்துள்ளது.
Advertisement
உலகின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 85வது இடத்திற்கு சரிவடைந்துள்ளது.
Advertisement
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ், கடந்த 19 வருடங்களில் உள்ள தரவுகளின் அடிப்படையிலும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின்படியும் பாஸ்போர்ட்டிற்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 199 நாடுகளின் பாஸ்போர்ட் மற்றும் உலகளவில் உள்ள 227 பயண இடங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வு மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு ஒவ்வொரு நாடுளின் பாஸ்போர்ட்டின் வலிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. அதன்படி 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் நாடான பிரான்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது
Next Article