உலகின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - ஆயுட்காலம் முடிந்ததால் வெடிகுண்டு வைத்து தகர்ப்பு !
உலகின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டரான கிங்டா கா வெடிகுண்டு வைத்து தகர்த்தப்பட்டது.
08:04 AM Mar 05, 2025 IST | Web Editor
Advertisement
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனியார் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்படுகிறது. அங்கு சுமார் 450 அடி உயரமுள்ள கிங்டா கா என்ற ரோலர் கோஸ்டர் இருந்தது. உலகின் மிக உயரமான உல்லாச சவாரி எந்திரமாக இருந்த கிங்டா கா அந்த பகுதியின் மிகப்பெரும் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
Advertisement
எனவே அதனை அகற்றி விட்டு புதிய உல்லாச சவாரி எந்திரத்தை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.