For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணம் | சொல்லி அடித்த #ElonMusk!

09:45 PM Sep 10, 2024 IST | Web Editor
உலகின் முதல் தனியார் விண்வெளி பயணம்   சொல்லி அடித்த  elonmusk
Advertisement

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் இன்று அறிமுகப்படுத்தியது.

Advertisement

உலக அளவில் விண்வெளியில் சாதனை படைக்க அமெரிக்கா சீனா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. சந்திரன் சூரியன், செவ்வாய் என கோள்களை ஆராயும் முயற்சிகளில் விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விண்வெளி வளர்ச்சி துறைக்கு என அனைத்து நாடுகளும் பெரிய தொகையை ஒதுக்குகின்றன. இதில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை சேவை நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

இதன் நிறுவனர் எலான் மஸ்க் ஆவார். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினரை மீட்பதற்கு இவருக்கு சொந்தமான ஸ்பெஷல் நிறுவனம் தான் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் தனது நெருங்கிய நண்பரான ஸ்காட் 'கிட்' போட்டீட், ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் அன்னா மேனன் மற்றும் சாரா கில்லிஸ் ஆகியோருடன் ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்றார்.

இந்த ராக்கெட் நான்கு பேரையும் பூமியில் இருந்து 1,400 கிலோமீட்டர்கள் வரை கொண்டு சென்றது. நாசாவின் அப்பல்லோ பயணத்திற்குப் பிறகு, பூமிக்கு மேலே எந்த மனிதனும் இவ்வளவு உயரத்தை எட்டியதில்லை.

Tags :
Advertisement