For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் | புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய #SouthAfrica!

07:19 PM Dec 09, 2024 IST | Web Editor
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்   புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய  southafrica
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 109 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:

தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்) - முதல் இடம்

ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்) - 2வது இடம்

இந்தியா (57.29 சதவீதம்) - 3வது இடம்

இலங்கை (45.45 சதவீதம்) - 4வது இடம்

இங்கிலாந்து (45.24 சதவீதம்) - 5வது இடம்

நியூசிலாந்து (44.23 சதவீதம்) - 6வது இடம்

பாகிஸ்தான் (33.33 சதவீதம்) - 7 வது இடம்

வங்காளதேசம் (31.25 சதவீதம்) - 8வது இடம்

வெஸ்ட் இண்டீஸ் (24.24 சதவீதம்) - 9வது இடம்

Advertisement