உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா!
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுவது இதுவே முதல்முறை ஆகும். தென்னாப்பிரிக்கா அணி கடந்த சில மாதங்களாக டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் பேட் கம்மின்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை கண்டதே இல்லை.
அதே சமயம் தெம்ப பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. இதனால் கோப்பைவை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா விளையாடும். மேலும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் விளையாடும். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவன்:
உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
தென்னாப்பிரிக்காவின் பிளேயிங் லெவன்:
அய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹம், கைல் வெரைன், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.