Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - 27 வருட காத்திருப்பு... புதிய வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி...
05:37 PM Jun 14, 2025 IST | Web Editor
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி...
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறிய நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து, ஆஸ்திரேலிய அணி 282 ரன்களை தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து 2வது இன்னிங்சை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 83.4 ஓவர்களில் 282 என்ற  இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஆனது.

லார்ட்ஸ் மைதானத்தில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு எந்த அணியும் 280 ரன்களுக்கு அதிகமான ஸ்கோரை சேஸ் செய்து வெற்றிப் பெற்றதில்லை. 282 ரன்கள் எடுத்து இந்த வரலாற்றையும் தென் ஆப்பிரிக்கா அணி முறியடித்துள்ளது.

Tags :
AustraliaICCSA vs AUSSouth AfricaWTC Final 2025
Advertisement
Next Article