For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி! உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று மாரியப்பன் தங்கவேலு அசத்தல்!

07:21 PM May 21, 2024 IST | Web Editor
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி  உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று மாரியப்பன் தங்கவேலு அசத்தல்
Advertisement

ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Advertisement

ஜப்பானில் உள்ள கோபி நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான சுமித் ஆன்டில், ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் T64 பிரிவில் தனது உலகப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஜப்பானின் கோபியில் நடந்து வரும் 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ரியோ பாரா ஒலிம்பிக் சாம்பியனான மாரியப்பன் தங்கவேலு (T63 பிரிவு) சீசனில் 1.88 மீட்டர் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்ரா ஃப்ரீச் (1.85 மீ) மற்றும் சாம் க்ரூ (1.82 மீ) ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். மற்ற இரண்டு இந்திய வீரர்களான வருண் பாடி மற்றும் ராம்சிங்பாய் படியார் ஆகியோர் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், இவருக்கு தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (மே 21) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் WorldParaAthletics Championships s சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

https://x.com/TRBRajaa/status/1792903325391753269

Tags :
Advertisement