உலக செவிலியர் தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஒவ்வொரு ஆண்டும் மே 12ம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், 'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது. கடந்த 1974-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் நிக்சன் கொண்டு வந்த செவிலியர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டு உலக செவிலியர் தினத்தின் கருப்பொருள் 'செவிலியர்களைப் பராமரிப்பது பொருளாதாரங்களை வலுப்படுத்துகிறது' என்பதாகும்.
இதனிடையே உலக செவிலியர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக செவிலியர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! pic.twitter.com/r7ZElcL4vr
— M.K.Stalin (@mkstalin) May 12, 2025
"தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.