Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு!

05:21 PM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

Advertisement

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.  மாவட்ட  ஆட்சியர் சங்கீதா,  எம்.பி. வெங்கடேசன்,  எம்எல்ஏ பூமிநாதன் கலந்து கொண்டனர்.  போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆன்லைன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனைக்கு பின்னர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கும்,  700 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.  மாடுபிடி வீரர்களின் உறுதி மொழி ஏற்புக்கு பிறகு ஜல்லிக்கட்டு துவங்கியது.  முதலில் 6 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் தொடர்ச்சியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். சில காளைகள் வீரர்களின் கைகளில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடியது காண்போரை கவரும் வகையில் இருந்தது.

இந்நிலையில், சுமார் 900 காளைகள் பரிசோதனைக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டது. 35 காளைகள் நிராகரிக்கப்பட்டன. இதே போன்று ஜல்லிக்கட்டு போட்டியில் வீரமுடன் காளைகளை தழுவிய வீரர்களில் 16 பேர் காயமடைந்தனர். மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர் காயமடைந்தனர். இதே போன்று பார்வையாளர்கள் 17 பேரும், காவல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர், காவல் சார்பு ஆய்வாளர், துணை காவல்கண்காணிப்பாளர் உள்பட மூவரும் காயமடைந்தனர். இதன்படி மொத்தமாக 46 பேர் காயமடைந்த நிலையில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags :
மதுரைமாட்டுபொங்கல்பொங்கலோ பொங்கல்பாலமேடுஜல்லிக்கட்டுCelebrationJallikattujallikattu 2024Maatu PongalMadurainews7 tamilNews7 Tamil UpdatesPalameduPongalPongal 2024
Advertisement
Next Article