உலகக்கோப்பை: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை...
06:57 AM Nov 05, 2023 IST | Web Editor
Advertisement
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
Advertisement
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் இந்திய அணி, 7 போட்டிகளிலும் வென்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
அதேநேரத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைய மல்லுக்கட்டி வருகின்றன.
அந்த வகையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், இப்போட்டியில் தொடர் வெற்றியை பெற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.