For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகக் கோப்பை யாருக்கு..? - தோனியைத் தொடர்ந்து கோப்பையை தன்வசமாக்குவாரா ரோஹித் சர்மா?

08:04 AM Jun 28, 2024 IST | Web Editor
உலகக் கோப்பை யாருக்கு      தோனியைத் தொடர்ந்து கோப்பையை தன்வசமாக்குவாரா ரோஹித் சர்மா
Advertisement

17ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வெல்லுமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்

Advertisement

கிரிக்கெட்.. என்பது வெறும் சொல்லோ.. அல்லது சாதரண விளையாட்டோ அல்ல.  அதேபோல அது நமது நாட்டின் தேசிய விளையாட்டும் அல்ல. ஆனால் கிரிக்கெட் இந்தியாவின் உணர்வுகளில் ஒன்றாக கலந்துள்ளது. பள்ளிக்கூட வசதிகளிலேயே இல்லாத பழங்குடி கிராமத்தில் கூட சச்சின் மற்றும் தோனியின் பெயரை உச்சரித்துக் கொண்டே தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளை இன்றும் காணலாம்.

உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றபோது ஆரவாரங்கள் எப்படி இருந்ததோ அதனைவிட பல மடங்கு  தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றபோது ஆரவாரங்கள் இருந்தது. இதனைத் தொடர்ந்து அறிமுகமான டி20 உலகக் கோப்பையின் முதல் கோப்பையை இந்தியாதான் கைப்பற்றியது.

2007ம் ஆண்டு தொடங்கிய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றாலும் அதன்பின்னர் 17 வருடங்கள் கடந்த நிலையில் ஒரே ஒரு கோப்பையுடன் இந்தியா விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 103ரன்களிலேயே சுருட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.

இதுவரை டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் தலா இரண்டு முறை வென்றுள்ளன. இந்தியாவும் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதுகின்றது.  டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினால் 2உலகக் கோப்பையை கைப்பற்றிய அணிகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும்.

2007ம் ஆண்டு உலகக் கோப்பை தோனிக்கு எப்படி ஸ்பெஷலான ஒன்றோ அதேபோல தற்போதைய உலகக் கோப்பை இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

அரையிறுதி வெற்றிக்கு பிறகு ஊடகங்களிடம் பேசிய ரோஹித் சர்மா “எங்கள் அணி நிதானமாகவும் உறுதியுடனும் விளையாடும்,  இறுதிப் போட்டிக்கான அழுத்தத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். கோப்பையை கைப்பற்ற நிச்சயம் சிறந்த மற்றும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

17 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது உலகக் கோப்பையை இந்தியா தன்வசமாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags :
Advertisement