உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வீரர்களுக்கு வாழ்த்து கூற பிரதமர் மோடி நேரில் வருகை!
உலகக்கோப்பை இறுதிப்போட்டி அலகாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், போட்டியை காண பிரதமர் மோடி நேரில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் முதல் ஆட்டமாக இந்திய அணி மற்றும் நியூசிலாந்து பங்கேற்ற போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது.
அதனை தொடர்ந்து, உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலிய அணியும் பலப்பரிச்சையில் ஈடுபட்டுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதும்.
இந்த உலகக்கோப்பை போட்டிக்காக உலகமே எதிர்பார்த்து காத்திருப்பது புதிதான நிகழ்வு ஒன்றும் அல்ல. இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டியில் இதற்கு முன் பங்கேற்றுள்ளன. இன்னும் கூறப்போனால் இந்த போட்டிக்காக தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது எனக்கூறலாம். அதேபோல் தென்னாப்பிரிக்க அணி ஒரு முறை கூட இதற்கு முன் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது இல்லை. எனவே பெரிய எதிர்பார்ப்பு இன்றைய போட்டியிலேயெ ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது வரும் 19-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு வருகை தந்திருந்தார். அவர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், போட்டி நடைபெறும் நாட்டின் பெரும் தலைவர்கள் மைதானத்திற்கு வருவது புதிய நிகழ்வு அல்ல என்பதால், இந்த போட்டிக்கு பிரதமர் மோடி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.