For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் | இந்திய அணியிடம் இருந்து 2 கோப்பைகளை பறித்துள்ள “டிராவிஸ் ஹெட்”

07:34 AM Nov 20, 2023 IST | Web Editor
உலகக் கோப்பை கிரிக்கெட்   இந்திய அணியிடம் இருந்து 2 கோப்பைகளை பறித்துள்ள  “டிராவிஸ் ஹெட்”
Advertisement

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் இந்திய அணியிடம் இருந்து 2 கோப்பைகளை பறித்துள்ளார்.

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவிடம் தோற்று நழுவ விட்டது. குறிப்பாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இம்முறை வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58 ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே எளிதாக வென்றது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் இந்திய அணியிடம் இருந்து 2 கோப்பைகளை பறித்துள்ளார். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்டது போல ஒருநாள் உலகக்கோப்பையிலும் சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

Advertisement