Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலக செஸ் சாம்பியன்ஷிப் | முதல் போட்டியில் குகேஷ் தோல்வி!

09:38 AM Nov 26, 2024 IST | Web Editor
Advertisement

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் இந்திய வீரர் குகேஷ் தோல்வியடைந்தார்.

Advertisement

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று ( நவ.25ம் தேதி) தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான குகேஷ் எதிர்த்து விளையாடினார். முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை காய்களுடனும், டிங் லிரென் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள்.

இதையும் படியுங்கள் : மகாராஷ்டிராவில் அடுத்த முதலமைச்சர் யார்? மகாயுதி கூட்டணியில் தொடரும் இழுபறி!

இதில் 42-வது காய் நகர்த்தலின் போது டிங் லிரென் வெற்றி பெற்றார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டம் மாலை 6.45 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் டிங் லிரென் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2-வது சுற்று நடைபெறுகிறது.

Tags :
chinadefeatDingLirenfirst roundIndiaKukeshNews7Tamilnews7TamilUpdatesWorld Chess Championship
Advertisement
Next Article