For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

World Championship of Legends 2024 - பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

11:38 AM Jul 14, 2024 IST | Web Editor
world championship of legends 2024   பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி
Advertisement

உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றது. 

Advertisement

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நேற்று பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. 2007-ஆம் ஆண்டு டி20 தொடர் இறுதி போட்டியில் விளையாடிய பல வீரர்கள், இந்த போட்டியில் களமிறங்கினர்.

யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் என்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 156/6 ரன்களை குவித்தது. அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலில் 41 ரன்கள் எடுத்தார். கம்ரன் அக்மல் 24 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அனுரீத் சிங்  3 விக்கெட்டுகள் எடுத்தார்.

157 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்தியா சாம்பியன்ஸ் அணியில் ஓப்பனராக வந்த அம்பத்தி ராயுடு அரை சதம் விளாசினார். அவர் 30 பந்துகளில் 50 ரன் எடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடிய யுவராஜ் ரசிகர்களை அதிரவைத்த நிலையில், மறுபுறம் அதிரடி காட்டிய யூசுப் பதான் 30 வேகமாக அடித்து ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் இந்தியா வெற்றியை பதிவு செய்து கோப்பையை தனதாக்கியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்னும், யூசுப் பதான் 30 ரன்னும் எடுத்தனர்.

Tags :
Advertisement