For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக சைக்கிள் தினம்: கூகுள் மேப்பில் சைக்கிள் படம் போல் பயணம் செய்து அசத்திய குழு!

08:27 PM Jun 03, 2024 IST | Web Editor
உலக சைக்கிள் தினம்  கூகுள் மேப்பில் சைக்கிள் படம் போல் பயணம் செய்து அசத்திய குழு
Advertisement

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, 300 சைக்கிள் ஓட்டிகள் கொண்ட தி பெடல் குழுவினர் ஜிபிஎஸ் ஆர்ட் மூலம் கூகுள் மேப்பிள் சைக்கிள் படத்தை வரைந்துள்ளனர்.

Advertisement

ஏப்ரல் 2018 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூன் 3-ம் தேதியை உலக சைக்கிள் தினமாக அறிவித்தது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சைக்கிள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த உலக்ம முழுவதும் விதவிதமான சைக்கிள் தின நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்படுகின்றன.

இந்த உலக சைக்கிள் தினத்தை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 300 சைக்கிள் ஓட்டுநர்கள் கொண்ட குழு வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். இதற்காக நேற்று (ஜூன் 2) சிறப்பு சைக்கிள் பயணம் செய்த இந்தக் குழுவினர் கூகுள் மேப்பில் சைக்கிள் வரைபடத்தை வரைந்து அசத்தியுள்ளனர். ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கூகுள் மேப் போன்ற புவி வரைபட செயலிகள் செயல்படுகின்றன.

இதை வைத்து உருவானது தான் ஜிபிஎஸ் ஆர்ட். கூகுள் மேப்பில் குறிப்பிட்ட உருவத்தைத் வரையும் வகையில் பயணம் செய்வதுதான் ஜிபிஎஸ் ஆர்ட் (GPS art) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜிபிஎஸ் ஆர்ட் பயணப் பிரியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேப்பில் பெரிய அளவில் குறிப்பிட்ட படத்தை உருவாக்க ஜிபிஎஸ் சாதனத்தின் உதவியுடன் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதையில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், 45 பெண்கள் உட்பட மொத்தம் 300 சைக்கிள் ஓட்டிகள் கொண்ட தி பெடல் குழுவினர் உலக சைக்கிள் தினத்தைக் கொண்டாட ஜிபிஎஸ் ஆர்ட் மூலம் சைக்கிள் படத்தை வரைந்துள்ளனர். உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு ஒரு தனித்துவமான செயல்பாட்டை ஏற்பாடு செய்வதே நோக்கமாக இருந்ததாகவும், காந்தி மண்டபத்திற்கு அருகில் தொடங்கி அங்கேயே முடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement