For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக பாட்மிண்டன் தரவரிசை - முதலிடத்தில் இந்திய வீரர்கள்!

01:10 PM May 21, 2024 IST | Web Editor
உலக பாட்மிண்டன் தரவரிசை   முதலிடத்தில் இந்திய வீரர்கள்
Advertisement

இந்தியாவின் முன்னணி பாட்மிண்ட்ன் வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி,  உலக பாட்மிண்டன் தரவரிசையில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளனர்.

Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் நடைபெற்றது.  இதில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.  அவர்கள் சீனாவின் சென் போ யாங் - லி ஈ இணையை நேர் செட்களில்  வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

உலக டூா் போட்டிகளில் இவர்களுக்கு இதுவரை  9 சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது.  மேலும் இவர்கள் நடப்பு சீசனில் ஏற்கெனவே பிரெஞ்சு ஓபன் போட்டியில் வென்ற நிலையில்,  இது 2-ஆவது வெற்றியாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தப்பட்டியலில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 99, 670 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலிருந்த சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

Tags :
Advertisement