#Diwali கொண்டாட்டம் | பட்டாசு தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு!
சிவகாசி அருகே உள்ள என்.எஸ்.வி பட்டாசு ஆலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. குடும்பங்கள் ஆர்வத்துடன் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி முதன்மையானது என்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லிப் பகுதியில் என்.எஸ்.வி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பட்டாசு ஆலையில் குடும்ப விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!
அந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு ஆண்டிற்கு 270 நாட்கள் பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட பணியாளர்கள்தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கறி விருந்து அளிக்கப்பட்டது.