குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் அனுப்பும் ஏவுதளப் பகுதிக்கான பணிகள் தொடக்கம்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கான குலசேகரன்பட்டினத்தில் 2200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபபட்டு கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல்லை நாட்டினார்.
இந்த நிலையில் அங்கு, ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் ஏவுதள பகுதிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் நாராயணன் இதற்கான அடிக்கல் நாட்டி பணியை தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏராளமனோர் பங்கேற்றனர்.
இஸ்ரோ நிறுவனத்துக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இந்தியாவின் செயற்கைக்கோள்கள் அங்கிருந்துதான் ஏவப்பட்டு வருகின்றன . தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை தூத்துகுடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது.