For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Word of the Year - 2023ல் அதிகம் புழங்கப்பட்ட சொல் எது தெரியுமா..?

11:42 AM Dec 30, 2023 IST | Web Editor
word of the year   2023ல் அதிகம் புழங்கப்பட்ட சொல் எது தெரியுமா
Advertisement

2023ம் ஆண்டில் அதிகம் புழங்கப்பட்ட சொற்களை உலகின் பிரபலமான சொல் அகராதி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

Advertisement

2023 ஆண்டு இன்னும் ஒரிரு தினங்களில் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர்.  அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன.

2023ல் அதிகம் புழங்கப்பட்ட சொல்

அதுபோலவே உலகில் உள்ள மக்களால் பல்வேறு சொற்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து பருகின்றன. தற்போது இணையத்தின் பயன்கள் மற்றும் பயன்பாடு கனிசமான அளவு அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களான எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் உள்ளிட்டவற்றின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அவ்வபோது சில சொற்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் சொற்களை வைத்தே சில சினிமா படங்களின் தலைப்புகள்கூட அமைந்துள்ளன.

சமூக வலைதளங்களின் பங்களிப்பிற்கான காலம் உருமாறி தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காலம் என சொல்லும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியாவது வழக்கம்.

Word of the Year- Authenticity 

உலகில் புகழ்பெற்ற மெரியம் வெப்ஸ்டர், ஆக்ஸ்போர்டு, காலின்ஸ் போன்ற ஆங்கில மொழி அகராதி கள், ஓவ்வோர் ஆண்டின் இறுதியிலும் ' இந்த ஆண்டின் சொல்' ஐ   (Word of the Year) வெளியிட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டில் மக்களிடம் அதிகம் புழங்கிய, பொதுவெளியில் அதிக தாக்கம் செலுத்திய சொல், 'ஆண்டின் சொல்'லாகத் தேர்வுசெய்யப்படுகிறது.

'ஆண்டின் சொல்' என்பது அந்த ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட சொல்லாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.  ஆண்டில் மக்களிடையே அதிகம் நடைபெற்ற உரையாடலில் கவனம் பெற்ற மற்றும் புழக்கத்தில் இருந்த வார்த்தைகள்   'ஆண்டின் சொல்'லாகத் தேர்வாகின்றன.

அந்த வகையில், "authenticity என்கிற சொல்லை, 2023ஆம் 'ஆண்டின் சொல்லாக மெரியம் வெப்ஸ்டர் அகராதி அறிவித்துள்ளது. 'நம்பத்தகுந்தது'. 'உண்மையானது, 'போலி அல்ல' உள்ளிட்ட பொருளை இது குறிக்கும்.  இச்சொல்லின் பயன்பாடு செயற்கை நுண்ணறிவு சமூக வலைதளம் உள்ளிட்டவற்றின் பயன்பாடு காரணமாக இந்த ஆண்டு சரமாரியாக இந்த உயர்ந்ததாக மெரியம் வெப்ஸ்டர் தெரிவித்துள்ளது.

  Word of the Year Oxford - Rizz

அதேபோல உலகின் முன்னணி சொல் அகராதியான ஆக்ஸ்போர்டு நிறுவனம் இந்த ஆண்டின் சொல்லாக “RIZZ” என்கிற சொல்லை அறிவித்துள்ளது. பார்க்க பார்க்கவெல்லாம் ஒரு நபரை பிடிக்காது பார்த்தவுடனே பிடித்துப் போகும் என்பதன் சுருக்கமான பொருள் கொண்ட  வார்த்தைதான் RIZZ. இதனை முதல் ஈர்ப்பு , தூண்டுதல் எனவும் பொருள் கொள்ளலாம் .  கடந்த ஜூன் மாதத்தில் ஸ்பைடர் மேன் நடிகர் டாம் ஹாலண்ட் ஒரு நேர்காணலில் பேசும் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ."எனக்கு ரிஸ் குறைவுதான்” என பதிலளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சொல்லின் புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Prompt : 

இதேபோல ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் சொல்லில் அடுத்தடுத்த இடங்களை Prompt மற்றும் Situationship போன்ற வார்த்தைகள் பிடித்துள்ளன. AI பயன்பாடு காரணமாக Prompt என்கிற சொல் அதிகளவில் பயன்பாட்டில் இடம்பெற்றது. இதன் பொருள் ஒன்றை உடனடியாக செய்யத் தூண்டுதல் என்பதாகும். செயற்கை நுண்ணறிவு , அல்காரிதம் போன்றவற்றிற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

Situationship

ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் மூன்றாவது இடத்தை பிடித்த சொல் Situationship என்பதாகும். இதற்கு முறையாக திட்டமிடப்படாத உறவு என்று பொருள், சந்தர்பவாத உறவுகள் எனவும் பொருள் கொள்ளலாம். இந்த வார்த்தை  2010 களின் பிற்பகுதியில்  உருவாக்கப்பட்டுள்ளது.

இது முறையான அல்லது திட்டமிடப்படாத ஒரு காதல் அல்லது பாலியல் உறவைக் குறிக்கிறது. பலர் தங்கள் உறவுகளைப் பற்றி நிச்சயமற்ற தன்மை அல்லது உறுதியற்ற சந்தர்ப்பு வாதத்திற்காக வைத்திருக்கும் உறவுகளை குறிக்க இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.

- ச.அகமது

Tags :
Advertisement