For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WomensT20WorldCup | ஸ்காட்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி!

08:14 PM Oct 09, 2024 IST | Web Editor
 womenst20worldcup   ஸ்காட்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
Advertisement

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அந்த 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக தாசிம் பிரிட்ஸ் 43 ரன்களும், மரிசேன் காப் 43 ரன்களும், லாரா வால்வாட் 40 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து, 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவர்களில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கேத்ரின் ப்ரேசர் 14 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட் வீழ்த்தினார்.

Tags :
Advertisement