மகளிர் உலகக்கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 23 ரன்களிலும், பிரதிகா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை அடுத்து ஆடிய ஹெர்லின் 46 ரன்களிலும், ஜெரேமியா 32 ரன்களிலும், தீப்தி 25 ரன்களிலும், ரானா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 35 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் டையானா பைஹ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் வீராங்கனைகள் முனிபா 2 ரன்களிலும், ஷமாஸ் 6 ரன்களிலும் அவுட் ஆகினர்.
அடுத்து களமிறங்கிய ரியாஸ் 2 ரன்களிலும், நடாலியா பர்வேஷ் 33 ரன்களிலும், கேப்டன் பாத்திமா 2 ரன்களிலும், சிட்ரா நவாஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியா ஆடிய சிட்ரா அமின் 81 ரன்களில் வெளியேறினார். மற்ற வீராங்கனைகளான ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில், பாகிஸ்தான் அணி 43 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.