For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகளிர் உலகக் கோப்பை | இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்!

மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
07:24 AM Oct 09, 2025 IST | Web Editor
மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
மகளிர் உலகக் கோப்பை   இந்தியா   தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
Advertisement

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

Advertisement

இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது .

அணிகளின் விவரம்:

இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரனி, கிரந்தி கவுட், ரேணுகா சிங் அல்லது அமன்ஜோத் கவுர்.

தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், சுனே லுஸ், மரிஜானே காப், அனேகே பாஷ், சினாலோ ஜாப்தா, குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், மசபதா கிளாஸ், அயபோங்கா காகா, நோங்குலுலேகா மிலாபா.

Tags :
Advertisement