2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 கிரிக்கேட் அணி : 3 இந்திய வீரங்கனைகளுக்கு இடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள், டெஸ்ட், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீரங்கனைகள் தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதன்படி, கடந்த ஆண்டின் சிறந்த மகளிர் டி20 போட்டிக்கான அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அதன்படி இந்தியா பேட்டர் ஸ்மிருதி மந்தனா, ஆல்- ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் இதில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி விவரம்,
கேப்டன் லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), சமாரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நாட் ஸ்கிவர் பிரண்ட் (இங்கிலாந்து), மெலி கெர் (நியூசிலாந்து), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர், இந்தியா), மரிசேன் கேப் (தென் ஆப்பிரிக்கா). ஓர்லா பிரெண்டர்கேஸ்ட் (அயர்லாந்து), தீப்தி சர்மா (இந்தியா). சதியா இக்பால் (பாகிஸ்தான்).