மகளிர் டி20 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை!
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் களமிறங்கினர். ஷஃபாலி வர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, உமா ஷேத்ரி 9 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஸ்மிருந்தி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷ்மி குணரத்னே மற்றும் கேப்டன் சமாரி அத்தப்பத்து களமிறங்கினர். விஷ்மி குணரத்னே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் சமாரி அத்தப்பத்து மற்றும் ஹர்சிதா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.
ஹர்சிதா சமரவிக்கிரம 69 ரன்களுடனும் (6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), கவிஷா தில்ஹாரி 30 ரன்களுடனும் (ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஆசிய கோப்பையை முதல் முறையாக வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.