"மகளிர் உரிமைத்தொகை உரியவர்களை முறையாக சென்றடையவில்லை"- வி.கே.சசிகலா விமர்சனம்!
"மகளிர் உரிமை தொகை உரியவர்களிடம் முறையாக சென்றடையவில்லை" என வி.கே.சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு வி.கே.சசிகலா அவரது
நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
"எம்ஜிஆரை பற்றி தவறாக பேசியிருக்கிறார்கள் திமுகவினர். முரசொலி மாறனும் கருணாநிதியும் மேகலா பிக்சர்ஸ் காக ஒரு படம், பணம் வாங்காமல் நடித்து குடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
அப்போது அவருடன் நடித்தது புரட்சி தலைவி அம்மா நடித்தார். இரண்டு பேருமே 'எங்கள் தங்கம்' என்ற படத்திற்காக பணம் வாங்காமல் நடித்தார்கள்.
அந்த படத்தின் 100-வது வெற்றி விழாவின் பொது கூட கருணாநிதி கூறி இருப்பார், இந்த
படத்தின் மூலம் கோபாலபுரம் வீட்டையும் மீட்டு விட்டென். அப்போது தற்போதைய முதலமைச்சருக்கு 6 வயது இருக்கும். வரலாறு எல்லாம் தெரியாமல் அமைச்சர் ஆகி இருப்பார் போல. எம்.ஜி.ஆரது கை, கொடுத்து கொடுத்து சிவந்த கை, அவரைப்பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
திமுக எதிர் கட்சி மட்டுமல்ல எதிரி கட்சியும் கூட. முதலமைச்சர் இந்தியாவிலேயே இல்லை, கேட்டால் முதலீடு ஈட்டுவதற்காக சென்றுள்ளதாக சொல்கிறார்.
இதையும் படியுங்கள்: சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தானியர்கள் 8 பேர் உட்பட 11 பேரை மீட்ட இந்திய கடற்படை!
ஓ.பன்னீர்செல்வம் எங்களுடய கட்சிக்காரர். எங்களுடைய குடும்பம் அவர். மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் உரியவர்களுக்கு முறையாகவே கிடைக்கவே இல்லை.
மக்களே புரிந்து கொண்டு அடுத்த வழி என்ன என்று மக்கள் தான் தீர்மானிக்க
வேண்டும். எப்போது அரசு புயல் நிவாரணம் நிதிக்கு ஆதாரங்கள் கொடுக்க சொன்னார்களோ அப்போதே அது இல்லை என்று அர்த்தம்.
டெல்டாவில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை என்பதால் விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.