For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகளிர் உரிமைத்தொகை: 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!

10:38 AM Nov 02, 2023 IST | Jeni
மகளிர் உரிமைத்தொகை  11 85 லட்சம் பேர் மேல்முறையீடு
Advertisement

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்ததால், இ-சேவை மையங்களில் பெண்கள் சென்று உதவித்தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்தனர். முன்னதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு அக்டோபர் 25-ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி அக்டோபர் 25-ம் தேதி வரை 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : கழுகு... காக்கா... - ‘லியோ’ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!!

மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு வரும் நவம்பர் 25-ம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

Tags :
Advertisement