மகளிர் பிரீமியர் லீக் | மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!
5 அணிகள் பங்கேற்றுள்ள 3வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.
இதையும் படியுங்கள் : பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்… 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!
அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53 ரன்களும், ரிச்சா கோஷ் 36 ரன்களும், பெர்ரி 49 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. பெங்களூரு அணியில் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி தடுமாறியது.
மும்பை அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.