For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் | குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது.
07:35 AM Feb 26, 2025 IST | Web Editor
மகளிர் பிரீமியர் லீக்   குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி
Advertisement

5 அணிகள் பங்கேற்றுள்ள நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் (wpl) கடந்த பிப்.14ம் தேத தொடங்கி  நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி, டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

Advertisement

இதையும் படியுங்கள் : இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 40 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் ஷிகா பாண்டே, மரிசான் கேப், அன்னபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி  டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனாசென் 61 ரன்களும் , ஷபாலி வர்மா 44 ரன்களும் எடுத்தனர். காஷ்வி கௌதம் 2 விக்கெட்டையும், ஆஷ்லீ கார்ட்னர், தனுஜா கன்வர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Tags :
Advertisement