"தமிழகப் பெண்களே திமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வராதீர்கள்" - அன்புமணி ராமதாஸ்!
திருப்பத்தூர் மாவட்டதில் "உரிமை மீட்பு தலைமுறை காக்க" பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி நடைப்பயணம் மேற்கொண்டவர் கொட்டும் மழையிலும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசியவர், தமிழகப் பெண்களே உங்களை காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் திமுக ஆட்சியை கொண்டு வராதீர்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பதினொன்றாம் வகுப்பு மாணவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அதேபோல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட செட்டேரி அணைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அணையிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதை அமைத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டேரி அணைக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
தனக்கு ஆறு காலம் ஆட்சி வழங்கினால் அனைத்து துறை மற்றும் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்து ஆறு மாதத்தில் அனைத்து கடற்கரையில் தடுத்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.