For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆண்களை விட பெண்களுக்குதான் அதிக தூக்கம் தேவை... ஏன் தெரியுமா?

11:23 PM Mar 18, 2024 IST | Web Editor
ஆண்களை விட பெண்களுக்குதான் அதிக தூக்கம் தேவை    ஏன் தெரியுமா
Advertisement

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு பொதுவாக தூக்கம் அதிகம் தேவை என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பெண்களுக்கு ஏன் அதிக உறக்கம் தேவைப்படுகிறது என்பதை அறிவதோடு, நல்ல தூக்கம் ஏன் முக்கியம் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

இந்திய தூக்க நிபுணர்களில் ஒருவராக  மருத்துவர் நிவேதிதா குமார் என்பவர் கூறுகையில், நல்ல ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிக முக்கியமான காரணி என்று வலியுறுத்துகிறார். மேலும், நல்ல தூக்கம் மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் அதிகரிக்கிறது. அதோடு, சிறந்த இதய ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், தோல் மற்றும் முடியின் தரம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. தரமான தூக்கம் உங்கள் உணர்ச்சிகளை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. ஆழ்ந்த தூக்கம் உடையவர்களுக்கு கவலை மற்றும் மனச்சோர்வு  குறைவதால், பணியிடங்களில் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.

தூக்கமின்மை அல்சைமர் மற்றும் நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும். நீண்ட காலமாக தூக்கமின்மை தொடரும் பட்சத்தில் இது உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்பை விளைவிக்கலாம் என்று எடுத்துரைக்கிறார்.

ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தூக்க மருத்துவ ஆலோசகர் அருண் கோட்டாரு கூறுகையில், தூக்கத்தின் போது உடலானது திசு சரிசெய்தல், தசை வளர்ச்சி மற்றும் ஹார்மோன் ஒழுங்குமுறை போன்ற அத்தியாவசிய செயல்முறைகளுக்கு உட்படுகிறது என்று கூறியதோடு, நாள்பட்ட தூக்கமின்மை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார். இது அறிவாற்றல் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை பாதிக்கலாம் எனவும் அவர் கூறுகிறார்.

உங்கள் தூக்கத்திற்கான தேவை வயதுக்கு ஏற்ப மாறும்

புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகிறது.  பெரியவர்களை பொறுத்தவரை ஆரோக்யமான வாழ்விற்கு ஒரு இரவுக்கு 7-9 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர் குமார் கூறுகையில், ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடம் அதிக தூக்கம் தேவை என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது என்று கூறுகிறார். குறிப்பாக தினசரி வேலை பழுவில் இருந்து மீள ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.

தொடர்ச்சியாக மேலும் பல  காரணங்களையும் அவர் பட்டியலிடுகிறார். அதில், பெண்களின் மூளையானது ஆண்களின் மூளையை விட வித்தியாசமானதாகவும் சிக்கலானதாகவும் இருக்கும். பெண்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை செய்து தங்கள் மூளையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இதுவும் ஆண்களை விட சற்றே அதிக தூக்கம் தேவை படுவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

அதே போல, பெண்களுக்கு தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது தூக்க சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் பெண்களின் மொத்த உறக்க நேரம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை ஆபத்தும் 40 சதவீதம் அதிகம்.

இதற்கு பின்னணியில் ஹார்மோன்கள் உள்ளதா?

குறிப்பாக பெண்களின் தூக்கம் ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்படுகிறது. மாதவிடாய் சுழற்சி முழுவதும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தூக்க முறைகளை சீர்குலைக்கும். இந்த இடையூறுகள் மாதவிடாய்க்கு முந்தைய கட்டத்தில் அதிகமாக இருக்கும்.

மேலும், கர்ப்ப காலத்தில், உடல் அசௌகரியத்துடன் ஹார்மோன் மாற்றங்கள் தூக்கத்தை மேலும் சீர்குலைக்கும். மாதவிடாய் நின்ற மாற்றம் என்பது குறிப்பிடத்தக்க ஹார்மோன் எழுச்சியின் மற்றொரு காலமாகும், இதுவும் தூக்கத்தை பாதிக்கிறது. இப்படி பெண்கள் ஆழ்ந்த தூக்கம் பெறுவதை பல காரணிகள் தடுக்கின்றன.

பெண்கள் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்பவர்கள்:

ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் வீட்டில் உள்ள அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதால், பல பணிகளில் ஈடுபடுகின்றனர். பொதுவாக, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை விட தங்கள் பொறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.  என்கிறார் பெங்களூரு க்ளீனிகிள்ஸ் பிஜிஎஸ் மருத்துவமனையைச் சேர்ந்த உளவியலாளர் சுமலதா வாசுதேவா.

இவ்வாறு ஆழ்ந்த தூக்கம் பெறுவதில் பெண்களுக்குக்கு பல தடைகள் இருப்பதால் ஆண்களை விட சுமார் 20 நிமிடங்கள் கூடுதலாக பெண்கள் தூங்க வேண்டும் அதுவும் ஆழ்ந்த தூக்கம் வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Tags :
Advertisement