பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் - கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Check
This News Fact Checked by ‘PTI’
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் குளிர்சாதனப்பெட்டிக்கு அருகில் ஒரு உடல் இருக்கும் அறைக்குள் பல போலீஸார் நுழைவதைக் காட்டுகிறது. ஒரு முஸ்லீம் பெண் அவரது காதலனால் கொல்லப்பட்டதாகவும் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காதலன் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்றும் அவர்கள் லிவ்-இன் உறவில் இருந்ததாகவும் பகிரப்பட்ட பதிவுகளில் எழுதியிருந்தனர்.
தனது லிவ்-இன் இணையரை கொன்று அவரது உடலை குளிர்சாதன பெட்டியில் அடைத்ததாகவும் பயனர்கள் கூறினர். இருப்பினும், பிடிஐ ஃபேக்ட் செக் டெஸ்க் நடத்திய விசாரணையில், அந்த வைரலான வீடியோ மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் நடந்தது என்றும் உயிரிழந்த பெண் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் என்பதும் என்று கண்டறியப்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தவறான வகுப்புவாத கூற்றுடன் பகிரப்பட்டது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் கூற்று என்ன?
அக்தர் நக்ஷ்பந்தி என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஜனவரி 24 அன்று ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் ஒரு முஸ்லீம் பெண்ணின் உடல் குளிர்சாதன பெட்டிக்கு அருகில் இருப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அவரது இந்து லிவ்-இன் பார்ட்னரால் கொல்லப்பட்டார் என்றும் அவரது உடல் குளிர்சாதன பெட்டியில் அடைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியில் எழுதப்பட்ட பதிவின் தலைப்பு: "என் சகோதரிகளே, நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், உங்கள் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் இப்படித்தான் இழக்க நேரிடும்." எனக் குறிப்பிட்டிருந்தது.
வீடியோவில் ஓடும் வாசகத்தில் “சஞ்சயும் குல்னாஸும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர், கடந்த நான்கு நாட்களாக பூட்டியிருந்த வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். கதவை யாரும் திறக்காததால் பொதுமக்கள் கதவை உடைத்து சோதனை செய்தனர். அப்போது குல்னாஸின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது.” என எழுதப்பட்டிருந்தது.
இடுகைக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு இங்கே உள்ளது மற்றும் கீழே அதன் ஸ்கிரீன் ஷாட் உள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
InVid Tool Search மூலம் பிடிஐ டெஸ்க் வீடியோவை இயக்கியது மற்றும் சில கீஃப்ரேம்களைக் கண்டறிந்தது. அதனை கூகுள் லென்ஸ் மூலம் தேடியபோது வேறு பல பயனர்களும் இதே கூற்றுடன் வீடியோவை பகிர்ந்துள்ளதைக் கண்டறிந்தோம். அத்தகைய ஒரு இடுகையை இங்கே பார்க்கலாம் மற்றும் அதன் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளை இங்கே காணலாம் :
தேடல் முடிவுகளை மேலும் ஸ்கேன் செய்ததில், ஜனவரி 11ம் தேதியிட்ட இந்தியா டைம்ஸ் செய்தியின் அறிக்கையை நாங்கள் கண்டோம், அதன் தலைப்பு பின்வருமாறு: “ ம.பி | லிவ்-இன் பார்ட்னரைக் கொன்ற காதலன் - 10 மாதங்கள் குளிர்சாதன பெட்டியில் உடலை மறைத்த நிலையில் கைது” என இடம்பெற்றிருந்தது.
அறிக்கைக்கான இணைப்பு இங்கே உள்ளது மற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது.
அந்த அறிக்கை வைரலான வீடியோவைப் போன்ற சில படங்களையும் கொண்டிருந்தது. வைரலான படம் மற்றும் செய்தி அறிக்கையில் இடம்பெற்ற படங்களை ஒப்பிட்டு கீழே கொடுத்துள்ளோம்.
ஜனவரி 10 தேதியிட்ட IANS செய்தி நிறுவனத்தின் X இடுகையையும் டெஸ்க் கண்டறிந்தது, அதன் தலைப்பு: “மத்தியப் பிரதேசம்: விருந்தாவன்தாம் காலனியில் ஒரு வீட்டில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பூட்டியிருந்த அறையில் குளிர்சாதனப்பெட்டிக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த இடுகைக்கான இணைப்பு இங்கே மற்றும் கீழே ஸ்கிரீன்ஷாட் உள்ளது.
இதுகுறித்த விசாரணையின் அடுத்த பகுதியில், பிடிஐ டெஸ்க் கூகுளில் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி தேடியது. இதன் முடிவில் ஜனவரி 11 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு அறிக்கையைக் கண்டது, அதன் தலைப்பு பின்வருமாறு: “ மத்திய பிரதேசம் | பூட்டிய அறையில் குளிர்சாதனப்பெட்டியில் சிதைந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
“ஆறு மாதங்களுக்கும் மேலாக, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் வாடகை அறையில் குளிர்சாதனப் பெட்டிக்குள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு; சில அடி தூரத்தில் அவர்களின் குடும்பம் வசித்து வந்த நிலையில் கொலை குறித்து அக்குடும்பத்திற்கு முழுமையாகத் தெரியவில்லை,” என்று அந்த செய்தி அறிக்கை தெரிவித்திருந்தது.
அறிக்கைக்கான இணைப்பு இங்கே உள்ளது மற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது.
அந்த அறிக்கையின் மற்றொரு பகுதியில் “துர்நாற்றம் குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குளிர்சாதன பெட்டியைத் திறந்து பார்த்தனர். அதில் சஞ்சய் படிதாரின் லிவ் -இன் பார்ட்னரான பிங்கி என்ற பிரதீபா பிரஜாபதியின் சிதைந்த உடல், ஒரு பெட்ஷீட்டில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது எனவும் காவல்துறை தெரிவித்தது. பிரதீபா மார்ச் 2024 இல் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியது. படிதாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததும் பிரதீபா தனது லிவ்-இன் இணையருடன் வாக்குவாதத்தின் ஈடுபட்டபோது அவரை படிதார் கழுத்தை நெரித்து கொன்றார். உடல் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு போலீசார் படிதாரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து டெஸ்க் தேவாஸ் காவல் கண்காணிப்பாளர் (SP) புனித் கெலாட்டைத் தொடர்பு கொண்டு, சம்பவத்தில் வகுப்புவாதக் கோணம் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். “இறந்தவர் ஒரு இந்து, அவர் பெயர் பிரதிபா பிரஜாபதி. இந்த முழு விஷயத்திலும் எந்த வகுப்புவாத கோணமும் இல்லை” என்று கெலாட் பிடிஐயிடம் தெரிவித்தார்.
முடிவு :
ஒரு முஸ்லீம் பெண் அவரது இந்து மதத்தைச் சார்ந்த காதலனால் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் லிவ்-இன் உறவுகளில் இருந்ததாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வைரலானது.பிடிஐ நடத்திய உண்மை சரிபார்ப்பில் பாதிக்கப்பட்டவர் ஒரு இந்து என்றும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரு இந்து என்றும், அதில் எந்த வகுப்புவாத கோணமும் இல்லை என்றும் டெஸ்க் முடிவு செய்தது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.