Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிறந்த 10-வது நாளில் தாயாரின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குழந்தை - அமெரிக்காவில் சுவாரஸ்யம்!

10:42 AM Dec 23, 2023 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில் பிறந்து 10 நாளே ஆன குழந்தையுடன் பெண் ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஃபெர்ரிஸ் ஸ்டேட் பல்கலைகழகத்தில்  டிப்ளமோ படித்து வருபவர் கிரேஸ்.  இவரது கல்லூரி காலம் முடிந்து கடந்த டிசம்பர் 15 அன்று பட்டமளிப்பு விழாவிற்கு தயாரானார்.  இந்த டிப்ளமோ கல்வியை அவரது வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக அவர் கருதினார்.

கிரேஸ் திருமணமான பின்னரும் தனது கல்வியை தொடர்ந்தார்.  அவரும் அவரது கணவரும் தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருந்தனர்.  கிரேஸ் குழந்தை பேறு தேதியும்,  அவரது பட்டமளிப்பு விழா தேதியும் மூன்று நாட்கள் இடைவெளியில் மட்டுமே இருந்தன.  டிசம்பர் 15ஆம் தேதி தான் ஆவலுடன் எதிர்பார்த்த பட்டமளிப்பு விழாவும்,  டிசம்பர் 18-ம் தேதி தங்களது  குழந்தையான அனபெல்லின் வருகையும் கிரேஸை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.


மருத்துவர்களும் பட்டமளிப்பு விழாவிற்கு மூன்று நாட்களுக்கு பின்னரே குழந்தை பிறக்கும் என அறுவை சிகிச்சை தேதியை குறிப்பிட்டிருந்தனர்.  இந்த நிலையில் எதிர்பாராத விதமாக குழந்தை டிசம்பர் 6ஆம் தேதி அன்றே இந்த உலகத்தை எட்டிப் பார்த்தது.  டிசம்பர் 6ஆம் தேதி குட்டி தேவதை அனபெல் பிறந்தார்.

அறுவை சிகிச்சை,  அதன் பிறகான மருத்துவனை ஓய்வு ஆகிவற்றிற்கு பின்னர் பலரும் பட்டமளிப்பு விழாவிற்கு செல்வது உகந்ததல்ல என வலியுறுத்தினர்.  ஆனால் கடின முயற்சியில் படித்து மிக நீண்டநாட்களாக ஆவலுடன் காத்திருந்த பட்டமளிப்பு விழாவை சக நண்பர்களுடன் பட்டம் வாங்குவதே சிறந்ததாக இருக்கும் என அவர் உறுதியாக இருந்தார்.  இதனைத் தொடர்ந்து தனது புதிய குழந்தையுடன் பட்டமளிப்பு விழாவிற்கு வந்து பட்டத்தை வாங்கினார்.

இதுகுறித்து கிரேஸ் கூறியதாவது..

"டிசம்பர் 6 ஆம் தேதி முன்கூட்டியே உலகத்தை பார்க்கலாம் என அன்னாபெல் முடிவு செய்துவிட்டாள்.  அதே நேரத்தில் இந்தப் பட்டத்திற்காக நான் மிக கடினமாக உழைத்தேன், மேலும் எனது வகுப்பில் உள்ள சக மாணவர்களுடன் சேர்ந்து இந்த பட்டம் பெறும் நிகழ்வு நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.  அதனால் அவளை என்னுடன் பட்டப்படிப்புக்கு அழைத்து வந்தேன்" என கிரேஸ் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவின் போது அணிவிக்கப்படும் கருப்பு அங்கியினுள் தனது 10நாள் குழந்தையான அனபெல்லை வைத்து அழைத்து வந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.  கிரேஸ் மற்றும் குழந்தை அனபெல்லை அவரது கணவர்,  குடும்பத்தினர் மற்றும் சக நண்பர்கள் , பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்தோர் என அனைவரும் உற்சாகமூட்டினர்.

Tags :
AmericaBirthChildGownGraduation CeremonyGraducationUS
Advertisement
Next Article